சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் துறையின் பதவி ஏற்ற பிறகு தன்னுடைய முதல்  ஆய்வை மேற்கொண்டார். உணவு கிடங்கு மட்டுமின்றி கோபாலபுரத்தில் இருக்கும் மற்ற இரண்டு நியாய விலை கடையையும் ஆய்வு மேற்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


நியாவிலை கடை இல்லாமல் கூட்டுறவு சங்கஙகளும் முக்கியம். பிற அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வை துவங்கி உள்ளோம். மக்களுக்கு உரிய விலையில் பொருட்கள் சேர வேண்டும். 


தமிழ்நாட்டில் 37 உணவு குடோண்கள் உள்ளது.இதில் சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள ரேஷன் பொருள் உணவு குடோனில்  ரேஷன் பொருட்கள் எப்படி உள்ளது. எங்கேந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆய்வு செய்தேன்.


மேலும் படிக்க | ஒரு ஊருல ஒரு மடாலயம்... ஜெயலலிதா பாணியில் ஈபிஎஸ்க்கு குட்டிக்கதை சொன்ன சசிகலா


ரேஷன் பொருட்கள் 3,477 நியாயவிலை கடை மூலம் 2.22 கோடி  அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.


மேலும் நெல் கொள்முதல் தாமதமாவதை பற்றி பேசிய அவர், பொது மக்களுக்கு நல்ல முறையில் உணவு கிடைக்க வேண்டும் என்றால், நல்ல முறையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம் 10 ரேசன் கடைகளை ஆய்வு நடத்த வேண்டும் அப்போது தான் மக்களுக்கு சிறந்த முறையில் பொருட்கள் கிடைக்கும்.


சீக்கிரம் நெல்கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தை முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதை ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்கப்படும். நெல்கொள்முதல் தாமதமாக செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் நெல் கொள்முதல் பிரச்சனைகள் தீர்க்கபடும் என்றார்.


தற்பொழுது துறை சார்ந்து புதிதாக நடவடிக்கைகள் ஏதாவது எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அரசின் அமுதம்  விற்பனையகம் உலகதரத்தில் தரம் உயர்த்தபடும்.  குறிப்பாக மக்களை ஏமாற்றி ரேஷன் பொருளை மற்ற மாநிலத்திற்கு எடுத்துச் சென்றால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.


அடுத்த வாரம் என் தலைமையில் டெல்டா மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என்று கூறினார்.


மேலும் தொடர்ந்து பேசிய அவர், AC Room அதிகாரி நான் அல்ல கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு இந்த துறையில் பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்: வெடித்தது அடுத்த சர்ச்சை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR