#MeToo - லீனா மணிமேகலை-க்கு ஆதரவாக களமிறங்கினார் அமலா பால்!
இயக்குநர் சுசி கணேசன் மீதான கவிஞர் லீனா மணிமேகலையின் #MeToo புகாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்!
இயக்குநர் சுசி கணேசன் மீதான கவிஞர் லீனா மணிமேகலையின் #MeToo புகாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்!
பத்திரிக்கை துறை, சினிமா துறை என பாகுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்து வருகிறது. இதை மாற்றவே பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பு புகார் அளித்தார். இந்த புகாரை மறுத்த இயக்குநர் சுசி கணேசன் லீனா மணிமேகலையிடன் ரூ.1 நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக லீனா மணிமேகலை-க்கு ஆதரவு தெரிவத்து நடிகை அமலா பால் களத்தில் குதித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
"சுசி கணேசன் இயக்கிய திருட்டு பயலே படத்தில் நான் கதாநாயகியாக நடித்துள்ளேன். சுசி கணேசனின் இரட்டை அர்த்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் அளிக்கும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை எனப் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்துள்ளேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடு பட்டிருப்பார் என நான் உணர்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு நன்றி தெரிவித்த லீனா மணிமேகலை, தமிழ் மொழிபெயர்ப்பு பதிவில் சில தவறுகள் இருப்பதாகவும், தான் சுசி கணேசனிடம் உதவியாளராக பணியாற்றவில்லை, 2005-ஆம் ஆண்டு அவரைச் சந்திக்கும் போதுதான் தொலைக்காட்சி தொகுப்பாளராகப் பணியாற்றினேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமலா பால்-க்கு ஏற்பட்ட கஷ்டத்திற்கு தான் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!