கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகமும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும். ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக கொரோனா நிதியை (Coronavirus) செலுத்தலாம் என்றார். 


ALSO READ | முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம்


அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்ட ஆயுதப்படை முதல் நிலை காவலர் பாபு என்பவர் தனது ஒரு மாத சம்பளத்தை அப்படியே முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். அவர் தனது ஏப்ரல் மாத முழு ஊதியம் ரூ.34,474-ஐ முதல்வர் (Cheif Minister) கொரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். 


கொரோனா பிடியில் இந்திய நாடே சிக்கி பரிதவித்து வரும் நிலையில், தமிழகத்திலும் மோசமான நிலை நீடித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு கடந்த ஆண்டு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆயுதப்படை முதல்நிலை காவலர் பாபு, இந்த ஆண்டும் தனது ஒரு மாத சம்பளமான சம்பளத்தை வழங்கியது நெகிழவைத்துள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR