சர்க்கரை நோயாளிக்கு சாக்லெட் டெலிவரி செய்த அமேசான்..!
மதுரை அருகே சர்க்கரை நோய் அளவை பரிசோதிக்கும் ஸ்டிக் ஆர்டர் செய்தவருக்கு அமேசான் நிறுவனம் சாக்லெட்டை பார்சலாக அனுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம், பசுமலை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெய்சிங் ராசையா. 74 வயதாகும் இவருக்கு சக்கரை நோய் உள்ளது. ராசையாவின் மகன் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதால், அங்கேயே மனைவி மற்றும் மகளுடன் செட்டிலாகிவிட்டார்.
ALSO READ | நிஜத்தில் ஒரு காதல்கோட்டை; எதிர்ப்பை மீறி மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பெண்
மதுரையில் வசித்து வரும் ராசையா வீட்டில் இருந்தவாறே சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதற்கான ACCU-CHEK எனும் ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து காட்டும் ஸ்டிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வாங்கி வருகிறார். இந்த ஸ்டிக்கை அமெரிக்காவில் இருக்கும் ராசையாவின் மகன் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், ராசையாவின் மகன் கடந்தவாரம் இந்த ஸ்டிக்கை வழக்கம்போல் அமேசான் தளத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆர்டர் செவ்வாய்க்கிழமை ராசையாவின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ராசையாவும் டெலிவரியை சரியாக பெற்றுக்கொண்டு, பின்னர் திறந்து பார்க்கலாம் என வைத்துள்ளார்.
ALSO READ | நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அண்ணாமலை வருத்தம்
சில நாட்கள் கழித்து திறந்துபார்த்தபோது, அந்த பார்சலில் இரண்டு சாக்லெட் இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராசையா, இந்த தகவலை மகனிடம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து அமேசான் நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோய் பரிசோதிக்கும் கருவியை ஆர்டர் செய்தவருக்கு அமேசான் தளத்தில் சாக்லெட் வந்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR