சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், சபரிமாலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா நடப்பெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் பங்கேற்றனர் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.


பின்னர் பேசிய தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் "ஹரிவராசனம் பாடலில் 366 எழுத்துக்கள் உள்ளதால்  தினமும் ஓர் எழுத்து நம்மை காக்கிறது,  ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகள் உள்ளன, இந்த 108 என்ற எண் இந்து மதம், புத்த மதம், யோக கலை ஆகியவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாகும். அதனால் தான் உயிரை காக்கும் ஆம்புலன்ஸ்க்கு கூட 108 என்று பெயர் வந்தது.


மேலும் படிக்க | பெண்களின் மார்பகங்களை காட்டிய அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் விளம்பரத்திற்கு தடை!


சபரிமலையில் உள்ள 18 படிகளை தாண்டினால் உடல் நலம், மனநலம் ஆகியவை மேம்படும்" என கூறினார்.


இதை கேட்ட தொண்டர்கள் சற்று திகைத்து போனார்கள் என கூறப்படுகிறது. இவரது இப்பேச்சு வழக்கம் போல் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.


மேலும் இவர் பாஜகவில் இணைந்த பிறகு இவ்வளவு பக்தி வந்ததா இல்லை எப்போதுமே இவ்வளவு பக்தியுடன் இருப்பாரா என்றவாறு இணையவாசிகள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | Cadbury: பழைய விளம்பரத்தில் பாலின சமத்துவம் என்ற புது வண்ணம் கொடுக்கும் கேட்பரி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR