தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்., திமுக சார்பில் வரும் மார்ச் 29 அன்று திட்டமிடப்பட்டிருந்து பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் திங்கள்கிழமை இரவு அதன் பொது சபைக் கூட்டத்தை ஒத்திவைக்கிறது. சமீபத்தில் காலமான பொதுச் செயலாளர் அன்பழகன் அவர்களின் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 29 அன்று கட்சியின் பொதுக்குழு கூடும் என்று கட்சி அறிவித்திருந்தது.


முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய நம்பிக்கை கொண்ட அன்பழகன் (97) அவர்கள் மார்ச் 7-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். 43 ஆண்டுகளாக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அவர், மறைந்ததை அடுத்து அவரது இடத்திற்கான போட்டி தற்போது கட்சியில் நிலவி வருகிறது.



இதற்கிடையில், திமுக மூத்த தலைவர் துரை முருகன் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகினார்.


கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் திங்களன்று துரை முருகன் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தனது விருப்பத்தை ஒரு கடிதம் மூலம் தெரிவித்ததாக தெரிவித்தார். எனவே நடைபெறவிருந்த பொதுச் சபை., பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுக்கும் என்று அவர் கூறினார்.


எவ்வாறாயினும், நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் வெடிப்பைக் கருத்தில் கொண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், சினிமா அரங்குகள் மற்றும் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கும் பிற இடங்கள் அடைக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


"அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில், பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, பின்னர் புதிய தேதிகள் அறிவிக்கப்படும்" என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 31 வரை கட்சி விழாக்களை நடத்த வேண்டாம் என்றும் அவர் கட்சி தொண்டர்களிடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.