இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கோரிக்கையை அமித் ஷா ஏற்பு என EPS தகவல்
இலங்கையில் இருந்து வந்த அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கான தமிழக அரசின் முன்மொழிவு ஆராயப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக முதலவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும், விரைவில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய பிரச்சனையாக முஸ்லீம் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு இடம் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த சட்டம் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் போது, இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக உறுப்பினர்கள் வலியுறுத்தி இருந்தனர். அதை மேற்கோள்காட்டி, நேற்று முன்தினம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை குடியுரிமை கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.
முதல்வரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, இப்பிரச்சனை குறித்து விரைவில் மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும், சரியான நேரத்தில் இதற்குரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் உறுதி அளித்தார் என்றும், குடியுரிமை சட்ட விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும் போரட்டத்தால் த தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. திமுக நடத்தும் பேரணியால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் முதலவர் பழனிசாமி காவல்துறை தொடர்பான பிரச்சினைகளை உள்துறை அமைச்சருக்கு விளக்கினார். இரட்டை குடியுரிமை வழங்குவது மூன்று ஆண்டுகளாக AIADMK இன் கோரிக்கையாக இருந்தது. மாநிலத்தில் வசிக்கும் தமிழ் அகதிகள் நிரந்தர வேலைவாய்ப்பைப் பெறவோ அல்லது தடையின்றி வணிகத்தை நடத்தவோ முடியும்.
எந்தவித பயண ஆவணங்கள் இல்லாமல் அண்டை நாட்டில் 1983 ஆம் ஆண்டு இனக் கலவரங்களுக்குப் பிறகு ஏராளமான அகதிகள் தமிழகத்திற்கு வந்ததால், அவர்கள் “சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” என்று கருதப்படுகிறார்கள். "அகதிகள் குறிச்சொல்" காரணமாக அவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப வேலைகள் கிடைக்கவில்லை.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.