சென்னை: கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 542 தொகுதிக்கான மக்களவை தேர்தல் நேற்றுடன் (மே 19) முடிந்தது. நேற்றுடன் மக்களவை தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், அனைத்து ஊடகங்களும் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. நாடு ழுமுவதும் பாஜக-வின் கை ஓங்கி இருப்பதையே பெரும்பாலும் ஊடங்களின் கருத்து கணிப்பு ஆகா இருந்தது. மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா நாளை விருந்து அளிக்க உள்ளார். இதனால் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகித்துள்ளது அதிமுக-வை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க்க உள்ளார் எனவும், அதற்காக நாளை அவர் டெல்லி செல்கிறார் எனவும் கூறப்பட்டிருந்தது. 


இந்தநிலையில், தமிழக துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாளை நடைபெற உள்ள விருந்தில் பங்கேற்க இன்று இரவு டெல்லி செல்கிறார் என தகவல்கள் கிடைத்துள்ளது. 


இது துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-க்கு முதல் முறையல்ல. பல முறை தமிழக முதல்வரை தவிர்த்து தனியாக டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.