தமிழிசை சவுந்திரராஜனை கோபமாக எச்சரித்த அமித் ஷா! பின்னணி இதுதான்
Amit Shah`s Stern Warning to Tamilisai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்த தமிழிசை சவுந்திர ராஜனை மத்திய உள்துறை அமித் ஷா கண்டித்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் அமித் ஷா, தமிழிசை சவுந்திர ராஜன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய நாயுடுவுடன் அமித்ஷா பேசிக்கொண்டிருந்தபோது தமிழிசை சவுந்திர ராஜன் மேடைக்கு வந்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். தமிழிசைக்கு முதலில் வணக்கம் தெரிவித்து அமைதியாக திரும்பிய அமித் ஷா, உடனே அவரை அழைத்து கோபமாக கண்டித்தார். அத்துடன் விரல் நீட்டி, சிவந்த கண்களுடன் பொதுவெளியில் பேசக்கூடாது என ஆங்கிலத்தில் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார். தமிழிசை சவுந்திர ராஜனும் அந்த இடத்தில் சிரித்துக் கொண்டே விளக்கம்கொடுக்க, அதனை துளியும் ஏற்கவில்லை அமித் ஷா. மாறாக, தன்னுடைய ஆர்டரை மட்டும் தெளிவாக தமிழிசைக்கு சொல்லிவிட்டார்.
மேலும் படிக்க | மத்திய அரசை எதிர்க்கும் பாமக? அன்புமணி ராமதாஸ் பேட்டி!
அமித் ஷா கோபத்துக்கு காரணம் என்ன?
அமித் ஷா கோபத்துக்கு காரணம் இருக்கிறது. தமிழிசை சவுந்திர ராஜன் அண்மைக்காலமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அவருக்கு எதிராக பேசி வருவதுடன் அண்ணாமலை வைத்திருக்கும் வார்ரூம் ஆட்களுக்கு கடும் எச்சரிக்கையையும் கொடுத்தார். தலைவர்களை அவதூறாக பேசக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என்றெல்லாம் பாஜக வார்ரூம்க்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அண்ணாமலை தலைவராக வந்தவுடன் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் பெருமளவில் கட்சியில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார் தமிழிசை. இதனால், தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமானது. தமிழிசைக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் திரள, அண்ணாமலை தரப்பு இந்த விஷயத்தை டெல்லி தலைமையின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது.
அண்ணாமலைக்கு வந்த உத்தரவு
அண்ணாமலை நடவடிக்கைகள் மீது டெல்லி பாஜக தலைமை அதிருப்தியில் இருந்தாலும், தமிழிசை விஷயத்தில் அண்ணாமலைக்கு ஆதரவாகவே இருக்கிறதாம். கட்சி விஷயத்தை எப்படி பொதுவெளியில் பேசலாம்?, அதிருப்தி இருந்தால் டெல்லி தலைமையிடம் வந்து கூறலாம் அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசலாம், அதனை விடுத்து தமிழிசை மீடியாவில் பேசியது கட்சி கட்டுப்பாட்டுக்குஎதிரானது என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி தலைமையிடம் பற்ற வைத்தது அண்ணாமலை தரப்பு. இதனைக் கேட்டுக் கொண்ட அமித் ஷா உள்ளிட்டோர் தமிழிசை தமிழ்நாடு பாஜக தொடர்பான கட்சி விஷயங்களில் தலையிட கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சி தான் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை பார்த்தையும் தன்னுடைய கோபத்தை நேரடியாகவே காட்டியிருக்கிறார் அமித் ஷா.
மேலும் படிக்க | அரசு பள்ளி அருகே அமர்க்களமாய் களைகட்டும் டாஸ்மாக் பார்: அவதியில் மாணவர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ