அரசு பள்ளி அருகே அமர்க்களமாய் களைகட்டும் டாஸ்மாக் பார்: அவதியில் மாணவர்கள்

மது அருந்துபவர்கள் அரசு பள்ளி அருகே போதையில் அறை குறை ஆடையுடன் படுத்திருப்பதால் மாணவர்கள் முக சுளிப்புடன் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jun 12, 2024, 12:09 PM IST
  • அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கூகுள் பே வசதியுடன் 24 நான்கு மணி நேரமும் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை.
  • மாணவர்கள் முக சுளிப்புடன் நடந்து செல்லும் நிலை.
  • அவல நிலையில் தவிக்கும் பள்ளிக்கு விமோசனம் கிடைக்குமா?
அரசு பள்ளி அருகே அமர்க்களமாய் களைகட்டும் டாஸ்மாக் பார்: அவதியில் மாணவர்கள் title=

வண்டலூர் கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கூகுள் பே வசதியுடன் 24 நான்கு  மணி நேரமும் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. மது அருந்துபவர்கள் அரசு பள்ளி அருகே போதையில் அறை குறை ஆடையுடன் படுத்திருப்பதால் மாணவர்கள் முக சுளிப்புடன் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவல நிலையில் தவிக்கும் பள்ளிக்கு விமோசனம் கிடைக்குமா? முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.  

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகை வேங்கடமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில்  இந்த அரசு பள்ளிக்கு அருகாமையில் அரசு டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகின்றன. 

மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மார்க் கடை இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அதே நேரத்தில் இந்த இடத்தில் பார்களுக்கும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால்  அரசு பள்ளியின்  அருகாமையில் உள்ள 4191 பதிவு எண் கொண்ட அரசு மதுபான கடையில் இயங்கி வரும் பார் 24 நான்கு மணி நேரமும் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதோடு மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்து வருகின்றனர். கூகுள் பே, பேடிஎம் வசதியுடன் பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர். 

அதிக விலைக்கு வாங்கும் மது பாட்டில்களுக்கு இரவு மிச்சமான கெட்டுப்போன தின்பண்டங்களை இலவசம் என்ற பேரில் வழங்கி வருகின்றனர். குறிப்பாக பள்ளி செயல்படும் காலை நேரத்திலே மதுபான கடை பார்கள் சட்ட விரோதமாக செயல்படுவதால் மது பிரியர்கள் காலையிலேயே மது பாட்டில்களை வாங்கி குடித்துவிட்டு பள்ளியின் அருகாமையில் போதையில் படுத்து உறங்குகிறார்கள். இதனால் பள்ளி மாணவர்கள் செல்லும்போது முக சுளிப்புடன் அந்த வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளியின் எதிரே உள்ள கடையின் வாசலில் அரைகுறை ஆடையுடன் மது போதையில் மது பிரியர்கள் தூங்குவதால் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் போது கடும் சிரமத்திற்கு மாணவர்கள் உள்ளாகின்றனர்.

மேலும் படிக்க | மத்திய அரசை எதிர்க்கும் பாமக? அன்புமணி ராமதாஸ் பேட்டி!

இது ஒரு புறம் இருக்க, டாஸ்மாக் பாருக்கு  மது பிரியர்கள் சென்றால், அதன் பிறகு அவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு, குவாட்டர் பாட்டிலை கட்டிங் கட்டிங் என கிளாஸில் ஊற்றி அவர்களை அங்கேயே குடிக்க வைத்து காலையிலேயே மட்டையாக்கி விடுகிறார்கள்.  மது பாட்டிலுடன் கெட்டுப்போன தின்பண்டல்களையும் இலவசம் என்ற பெயரில் கொடுத்து அவர்களை மதுக்கு அடிமை ஆக்கி வருகின்றனர். 

இதுபோன்று அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் பார் மட்டுமல்லாமல் மதுபான கடையையும் அகற்ற வேண்டும் என்றும், இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு கட வெண்டும் என்றும் பள்ளி மாணவர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | சென்னை : காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் கடத்தல்... மகள் தற்கொலை! காதலனை தூக்கிய பெற்றோர் - பரபரப்பு பின்னணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News