அம்மா மினி கிளினிக் இனி இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
அம்மா மினி கிளினிக் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, அதனால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் நிறைவுப் பகுதியில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த மினி கிளினிக்கில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதன்படி இது போன்று 2000 அம்மா மினி கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக (DMK) ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. அம்மா மினி கிளினிக் (Amma Mini Clinic) திட்டத்தை மூடுவதற்காகவே திமுக அரசு இந்த திட்டத்தை கொண்டு வருவதாக அதிமுகவினர் விமர்சித்து வந்தனர்.
ALSO READ | COVID-19 Update: இன்றைய கோவிட் பாதிப்பு
அந்த வகையில் தற்போது அம்மா மினி கிளினிக் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்துவிட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Ma. Subramanian) விளக்கமளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சேகர் பாபு, திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது.,
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறையில் 2வது அலையில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் பெரியார் திடலில் அமைக்கப்பட்டது. தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் 45 படுக்கைகளுடன் முதல் இடமாக பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் செங்கல்பட்டிலும் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வீடுகளில் தனிமை படுத்தப்பட்டவர்களை Virtual Monitor முறையில் கண்காணிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களின் தரவுகள் உள்ளது என்றார்.
அம்மா மினி கிளினிக் மூலம் பயனடைந்தவர்கள் பட்டியலை தர முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவ பணியாளர்களுக்கு மார்ச் வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களின் தரவுகள் உள்ளது.
எனவே அம்மா மினி கிளினிக் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை, அதனால் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் முடிந்துவிட்டது. 3 லட்சம் பேருக்கு 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையில் அம்மா கிளினிக் மூடலுக்கு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது எனக் குறிபிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அந்த கிளினிக்குகள் ஓராண்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருப்பது உண்மையாக இருந்தாலும்கூட மக்கள் நலன் கருதி அவற்றை நீட்டித்து செயல்படுத்தக் கூடாதா? அப்படி செய்வதுதானே ஓர் அரசாங்கத்தின் சரியான பணியாக இருக்க முடியும்?
புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே தி.மு.க. அரசு குறியாக இருப்பது தவறானது. அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்களும் மூடப்படுமோ? என்ற கவலை ஏற்படுகிறது எனக் குறிபிட்டுள்ளார்.
ALSO READ | கொரோனாவை குணமாக்கும் Molnupiravir மாத்திரைக்கு அங்கீகாரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR