சென்னை மாநகராட்சி விரைவில் அம்மா வாரச் சந்தை திறக்கப்பட உள்ளது. அதற்காக பல்வேறு அதிகாரிகளுடன் மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மா உணவகம் மக்கள் மற்றும் தொழிலாளர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, காய்கறிகள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் அம்மா வாரச் சந்தை திறக்கப்படும் என்று கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் விரைவில் அம்மா வாரச் சந்தை திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:


சென்னையில் அம்மா வாரச் சந்தை திறப்பதற்காக 3 இடங்களைத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  அதாவது மின்ட் மேம்பாலம் அருகில், அரும்பாக்கத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாய அலுவலகம் அருகில், கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோயில் ஆகிய இடங்கள் ஆகும். முதலில் வார இறுதி நாட்களில் திறக்க திட்டமிட்டிருக்கிறோம். அதன் பிறகு மக்களின் வரவேற்பு பொறுத்தே மற்ற நாட்களில் திறக்க முடிவெடுக்கப்படும். அதனால் மாநகராட்சி சார்பில் வேளாண் துறை, கால்நடைத் துறை, கதர் மற்றும் கைவினைப் பொருட்கள் துறை, தொழில் துறை போன்ற துறையை சேர்ந்த அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.


இந்த வாரச் சந்தைகள் திறக்கப்படுவதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். பொதுமக்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைக்கும். இதில் இடைத்தரகர்கள் தலையீடு முற்றி லும் ஒழிக்கப்படும். இத்திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மாநகராட்சி தெரிவித்ததுள்ளது.