எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும் என அக்கட்சி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் அவர்கள் மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் நடத்தி வருகிறார். இப்பயணத்தின் ஒருபகுதியாக அவர் நேற்று இரவு அந்தியூருக்கு பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் பேசியதாவது...
 
அந்தியூர் அருகே உள்ள மணியாச்சி ஓடைநீரை வரட்டுப்பள்ளம் அணை உள்பட 7 ஏரிகளுக்கு கொண்டுவரவேண்டும். பர்கூர் மலைப்பகுதியின் மேற்கு பகுதியில் உள்ள மலைக் கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்கபட வேண்டும். மேட்டூர் வலதுகரை வாய்க்கால் உபரிநீரை அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு வரவேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தம்மிடம் தெரிவித்துள்ளாதக தெரிவித்தார்.


மேலும் அமமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்தியூர் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் தண்ணீரை அரசு வீண் செய்கிறது. இதனால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. மழைநீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொண்டால் கர்நாடக மாநிலத்திடன் நான் தண்ணீருக்கு கை ஏந்த வேண்டிய நிலை இருக்காது.


பொதுபிரச்சனைகள் மட்டும் அல்லாமல், மக்களின் கோரிகைகளையும் தற்போதைய அரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது. வரும் தேர்தலில் மக்கள் அமமுக பக்கம் நிற்பார்கள், அமமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஆதரவுடன் அமமுக அமோக வெற்றிப்பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.