நடப்பு ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1,65,000 மாணவர்கள் சேர்க்கை
இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக அரசுப் பள்ளிகளில் சேர்க்கை நடந்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசுப் பள்ளிகளில் கூடுதலாக ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் 1,65,000 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதற்கான பட்டியல் அரசிடம் உள்ளது. மேலும் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு அம்மா ஆகியோர் வழியில், மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு "இருமொழிக் கொள்கை" என்பதில் உறுதியாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப் பள்ளிகளில் பயின்ற 2 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். சேர்ந்திருப்பதாக தெரிவித்தார்.