DMK Govt Schemes For Women: கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மட்டும் அல்லாமல் பெண்களுக்காக இலவச பேருந்து பயணத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்காக புதுப்பெண் திட்டம் என அசத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இதுகுறித்த விரிவான தகவல்களை காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றிய உரையாடல்களுக்கு இடையே கடந்த ஓர் ஆண்டாய் மாதம் 1000 ரூபாய் அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் மூலம் கிடைத்து வருகிறது. 1000 ரூபாய் கல்லூரி மாணவிகளுக்கு கிடைப்பதால் அவர்கள் அளவற்ற பயன்கள் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். பல மைல் தூரம் சென்று படிக்கும் மாணவிகள், காலை சாப்பிட முடியாமல் சீக்கிரம் பயணிக்க வேண்டிய அவலம் உள்ளது. ஆனால் அவர்கள் இந்த 1000 ரூபாய் மூலம் காலை உணவு, தேவையான புத்தகங்கள், தங்கள் அத்தியாவசிய தேவைகளை பெற்றோர்களிடம் எதிர்பார்க்காமல் செய்துகொள்வது என நிம்மதியாக உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் பல ஏழை எளிய மாணவிகளுக்கு பலனளித்து வருகிறது. 


இப்படிபட்ட சூழலில் தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கியுள்ளது. மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த முறை ஒருநாளுக்கு முன்னரே சோதனை ஓட்டமாக 1000 ரூபாய் பல பெண்களின் வங்கிக்கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசிகளால் தவித்து வரும் ஏழை எளிய குடும்பப் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன்பெறுவார்கள். இந்த திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மாதா மாதம் 1000 ரூபாய் பெற உள்ளனர்.


மேலும் படிக்க | உரிமைத் தொகை: பெண்களின் பொருளாதார தற்சார்பு


எதிர்கட்சிகள் இந்த 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விமர்சித்து வந்த நிலையில், தற்போது இந்த திட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தையும் சிலர் விமர்சித்தனர். ஆனால் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமப்புற பெண்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இப்படி தொடர்ந்து திமுக பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்த திட்டங்களைப் போல தான் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டமும். 


அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலையில் டிபன் வழங்கப்படுகிறது. இதனால் பசியோடு வகுப்பு செல்லும் குழந்தைகள் இனி வயிறு நிறைய சாப்பிட்டு நிம்மதியாக சென்று படிக்கிறார்கள். கிராமப்புறங்களில் பல தாய்மார்கள் விடியற்காலையிலேயே வயல் வேலைகளுக்கு செல்ல வேண்டி உள்ளதால், பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவை வழங்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் இப்போது அந்த கவலையும் அந்த பெண்களுக்கு இல்லை. ஏற்கனவே பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் இருப்பதால் ஒரு முழு நாள் மாணவர்கள் பசி இல்லாமல் நிம்மதியாக படிக்கின்றனர். 


1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் எப்படி சாத்தியம் என்ற கேள்விகளுக்கு மத்தியில் இன்று அதை சாத்தியமாக்கி வாயடைக்க செய்துள்ளது திமுக அரசு. அதேபோல மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும், புதிதாக மீண்டும் விண்ணபிக்க முடியுமா போன்ற பல கேள்விகளுக்கு தமிழக அரசு முறையான விளக்கத்தையும் அளித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் நிச்சயம் தமிழக மகளிருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.


மேலும் படிக்க | குடும்பங்களின் வளர்ச்சியில் பெண்களுக்கான உரிமைத் தொகை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ