குடும்பங்களின் நிம்மதியை உறுதி செய்யுங்கள் - அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் ரம்மியை முற்றிலுமாக தடை செய்து குடும்பங்களின் நிம்மதியை உறுதி செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியின் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கிறது. பலர் அந்த சூது வலையில் சிக்கி தன்னையும் தொலைத்து, தன் குடும்பத்தையும் தொலைத்துவருகின்றனர். பலர் தற்கொலையும் செய்துகொள்கின்றனர். மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டு வருகிறது.
அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டியை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும். மற்ற ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என கடிதம் கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | “25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி-பிஎஸ்என்எல் தவறான கட்டண விதிப்பு”: ஈஷா விளக்கம்
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், “தமிழக அரசு இதில் இன்னும் அதி தீவிரமாக முனைப்பு காட்டி ஆன்லைன் சூதாட்டங்களை முற்றிலுமாக தடை செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நிம்மதியை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் படிக்க | கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? பம்பை அகற்றாமல் தார் சாலை போட்ட வினோதம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ