தமிழ்நாடு அரசை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி மாணவர் சேர்க்கை திடீரென நிறுத்தப்பட்டது.
மேலும் இந்த இரண்டு வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதயடுத்து, எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படாது. அதேசமயம், அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்படுகிறது, அங்கன்வாடி மையங்களில் அந்த வகுப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அங்கன்வாடி மையங்களில் உள்ள அமைப்பாளர்களால் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை நடத்த முடியுமா என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி இதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகள் நிறுத்தப்படாது என்றும், தொடர்ந்து செயல்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியிருக்கிறார். மாணவர் நலன் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது
அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தவிர்க்க முடியாதவை. அதனால் தான் அந்த வகுப்புகள் மூடப்பட்டதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. பா.ம.க.வின் வலியுறுத்தலுக்குப் பிறகு மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
கல்வி சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் நிலையில் தன்னிச்சையாக முடிவெடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்; வல்லுனர்களின் கலந்தாய்வுக்குப் பிறகு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவதுடன் போதிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR