அன்புமணி ராமதாஸ்: பாமக பொட்டி வாங்கிக்கும் என பேசுவதா? இத்தோடு நிறுத்துங்கள்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாமக பொட்டி வாங்கிக்கும் என அவதூறாக சிலர் பேசுவதாகவும், இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சேலம், திண்டிவனம், காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 60 அடி உயரமுள்ள உயர் கோபுர மின் விளக்கு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் செவிலிமேட்டில் இருந்து பெங்களூர் மற்றும் வேலூர் இணைக்கும் புறவழிச் சாலையில் வெங்கடாபுரம் நான்கு வழி சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி நிதியின் கீழ் 7.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய 60 அடி உயர் மின் கோபுர விளக்கினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திறந்து வைத்தார்.
மேலும் நூறு அடி உயரமுள்ள பாமக கட்சி கொடி கம்பத்தில் பாமக கட்சி கொடியினையும் அவர் ஏற்றி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சமீப நாட்களாக என்னை பற்றியும், எங்கள் பாமக கட்சியை பற்றியும் சில ஊடகங்களில் ஒரு சிலர் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். வேண்டுமென்றே யாருடைய தூண்டுதலின் பேரில் பொய்யான அவதூறான செய்திகள் திட்டமிட்டே வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள். இதனை நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லையேல் சட்ட ரீதியாக பல வழக்குகள் உங்கள் மீது தொடுக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.
ஊடகங்களில் ஒரு சிலர் பாமக கட்சி தற்போதைய தேர்தலில் பேரம் பேசுகிறார்கள்,பொட்டியை(பணம்) வாங்கி விட்டார்கள் என அவதூறாக பொய்யாக பேசி வருகிறார்கள். அதனை நிறுக்கொள்ளுங்கள். இது அசிங்கமாக உள்ளது. இது உங்களுக்கு தான் அசிங்கம். ஒரு சில ஊடகத்துறையினர் ஊடகத்துறையை சார்ந்தவர்களா அல்லது அரசியல் இடைத்தரகர்களா? என்றளவுக்கு அவர்களின் நடவடிக்கை தரம் தாழ்ந்து இருக்கிறது. பாமக கட்சி மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து,நேர்மையாக போராடி வருகின்றோம். இது மேலும் தொடர்ந்தால் சட்ட ரீதியாகவும், கிரிமினல் ஆக்ஷனையும் நாங்கள் நிச்சயமாக எடுப்போம் என கடுமையாக எச்சரித்தார்.
மேலும் நல்ல ஒரு ஆரோக்கியமான விவதாங்களை ஊடகங்கள் செய்ய வேண்டும் அதற்கு மாறாக பொய்யான அவதூறான செய்திகளை பரப்பாதீர்கள் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த ஒரு பணிகளையும் முழுமையாக முடிக்காமல் அவசரகதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது தவறு எனவும், போதிய இணைப்பு வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதை தவிர்க்க நடவடிக்கை வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
மேலும் படிக்க | கோவை: MyV3 Ads செயலி உரிமையாளர் சிறையில் அடைப்பு - வாடிக்கையாளர்கள் பதற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ