ஆந்திர போலீஸை காரை ஏற்றி கொலை செய்த செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவன் சரண்.!
Villupuram: ஆந்திர மாநில போலீஸ் மீது கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். சினிமா பாணியில் நடந்த சம்பவம் குறித்த பின்னணியை பார்க்கலாம்.
ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் பிலேரூ அருகே உள்ள குண்ட்ராவாரி பள்ளி அருகே உள்ள சோதனை சாவடியில் கடந்த ஆறாம் தேதி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் செம்மர கடத்தில் ஈடுபட்ட கடத்தல் கும்பல் ஒன்று வந்துள்ளது. அதனை போலீசார் தடுக்க முயன்ற போது காரை நிறுத்தாமல் போலீசார் மீது இடித்து விட்டு தப்பி சென்றனர். இதில் கணேஷ் என்ற ஆந்திரா போலீஸ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து அதிரடி படை போலீசார் உதவியுடன் காரை துரத்தி சென்று பிடித்தனர்.
மேலும் படிக்க | தேசிய சிலம்பப் போட்டியில் பதக்கம் வென்ற எண்ணூர் மாணவர்கள்!
அந்த காரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் இருந்தனர். அருண்குமார், மணிவேலன் ஆகிய இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் செம்மர கடத்தல் கும்பல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்ததில் செம்மரக் கடத்தல் கும்பல் குறித்த மேலும் சில தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்தது. அதாவது இந்த செம்மர கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவரை காவல்துறையினர் அடையாளம் கண்டு கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக முக்கிய குற்றவாளியான கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்ராயன் மலை அருகே உள்ள கீழ்நிலவூர் பகுதியை சேர்ந்த ராமன் உள்ளிட்ட ஆறு நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேட தொடங்கினர். இந்த நிலையில், விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் முக்கிய குற்றவாளியான ராமன் என்பவர் சரண் அடைந்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராமனை வருகின்ற 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி அகிலா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் ஆயுதப்படை உதவி ஆய்வாலர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ராமனை கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ