செப்டம்பர் 25 ஆம் தேதி காலமான புகழ்பெற்ற பாடகர் எஸ் பி பாலசுப்பிரமண்யம் ( SP Balasubramaniam) அவர்களுக்கு அவர்களுக்கு, நாடுகளின் மிக உயர்ந்த சிவில் விருது 'பாரத் ரத்னா' வழங்குமாறு ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, திங்களன்று  மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமராவதி: "ஐந்து தசாப்தங்களாக திரைப்படைத்துறையில் கலைஞராக கோலோச்சிய எஸ்பிபி (SPB),  நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும் படைப்புகளை வழங்கியுள்ளார். அதனால் அவருக்கு இந்த மிக உயர்ந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டும்" என்று அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.


"எங்கள் ஆந்திரா மாநிலம் சிறந்த இசை மேதையாக திகழ்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறப்பிடமாக (நெல்லூர் மாவட்டம்) இருப்பது அதிர்ஷ்டம். அவரது அகால மரணம் இந்தியாவில் ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது" என முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.


அவரது இணையற்ற இசை திறமையினால், ஆறு தேசிய விருதுகளைத் தவிர, ஆந்திர அரசின் 25 நந்தி விருதுகளையும், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான விருதுகளையும் வென்றார்.


2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீயையும், 2011 ல் பத்ம பூஷன் விருதையும் பெற்றார். மத்திய அரசிடமிருந்து 2016 ஆம் ஆண்டில் வெள்ளி மயில் பதக்கத்தையும் பெற்றார். லதா மங்கேஷ்கர், பூபன் ஹசாரிகா, எம் எஸ் சுப்புலட்சுமி, உஸ்தாத் பிஸ்மில்லா கான் மற்றும் பண்டிட் பீம்சன் ஜோஷி போன்ற இசைக் கலைஞர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது.


அதே போல் புகழ்பெற்ற பாடகர் இசை மற்றும் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, எஸ் பி பாலசுப்பிரமண்யம் அவர்களுக்கு பாரத ரத்னாவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ”என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.


ALSO READ | youtube சானல் நேரலை சந்திப்பில், வதந்திகளை பரப்புபவர்களை கிழித்த SP Charan... !