அறிஞர் அண்ணாவின் 48_வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் திமுக அமைதி பேரணி நடத்தினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் முதல் அண்ணா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரை அமைதி பேரணி நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.


ஜல்லிக்கட்டு வன்முறைக்கு பிறகு மெரினாவில் 144 தடை உத்தரவு தமிழக அரசு அறிவித்துருந்தது. ஆனாலும் இன்று காலை 8.15 மணியளவில் திமுக அமைதி பேரணி ஆரம்பித்தது. இந்த பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இறுதியாக அண்ணா சமாதியில் மலர்வளையம் வைத்து மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.