தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பள்ளிப்பட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று என் மண் என் மக்கள் தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது லூர்து அன்னை ஆலயத்தில் உள்ள மாதா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக ஆலயத்திற்குள் சென்றார். அப்போது மாதா சிலைக்கு முன்பு நின்றிருந்த இளைஞர்கள் மணிப்பூர் கலவரத்தின் போது பாஜக சார்பில் சிறுபான்மையர் மக்களுக்கு எந்த ஒரு குரலும் கொடுக்கவில்லை என தெரிவித்து நீங்கள் மாலை அணிவிக்க வேண்டாம் என அங்கிருந்து இளைஞர்கள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முரசொலி நில சர்ச்சை: வழக்கின் தீர்ப்பு தேதியை குறித்த சென்னை உயர்நீதிமன்றம்


மணிப்பூர் விவகாரம் குறித்து அந்த இளைஞர்களுக்கு விவரித்த அண்ணாமலை எவ்வளவு எடுத்துக் கூறியும் நீங்கள் மாலை அணிவிக்க கூடாது என தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின்பு பாஜக தலைவர் அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்துச் சென்றார். பின்னர்  இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மாதா சிலைக்கு அணிவித்த மாலையை அகற்றி தூக்கி எறிந்தனர்.


மாதா சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேசிய அண்ணாமலை, சிலை உங்கள் பட்டா நிலத்தில் இருக்கிறதா?, என்னை தடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், திமுகவினர் போல தன்னிடம் வாக்குவாதம் எல்லாம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்களிடம் பேசிய அண்ணாமலை, இப்படி எதிர்ப்பு தெரிவித்தால் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டி கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபடுவேன், உங்களால் ஒன்னும் செய்ய முடியாது என எச்சரித்தார். அந்த போராட்டத்தை தடுத்துவிடுவீர்களா என்றும் அந்த இளைஞர்களை நோக்கி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். 


அண்ணாமலையின் இந்த நடத்தைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எப்போதும் மதம், கோயில் சார்ந்தே அரசியல் செய்து கொண்டிருப்பதாகவும், அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் அண்ணாலை செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மாதா சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்த உடனே அங்கு 10 ஆயிரம் பேரை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என சொல்லும் அண்ணாமலை, சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி பொதுமக்கள் வழிபாடு நடத்துவதற்கும் போராட்டம் நடத்துவாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் கனகசபை மீது பொதுமக்கள் வழிபடுவதற்கு அனுமதிக்காத நிலையில், அது குறித்து அண்ணாமலை என்ன பேசியிருக்கிறார்? என்றும் வினவியுள்ளனர். 


மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெறும்: அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ