தமிழக பாஜக தலைவர் விரைவில் மாற்றம்! அண்ணாமலையின் ஓபன்டாக்
கட்சியின் வளர்ச்சிக்காக என்னைக் கூட தலைமை மாற்றும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள புதியதாக துவக்கப்பட்ட தனியார் டீ கடையினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "திமுக எப்படி பெண்களை நடத்துகிறார்கள் என்பது தெரியும். கட்சியில் இரண்டு நபர்கள் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்கப்பட உள்ளது.நாணயத்தின் இரண்டு பக்கமும் உள்ளது. நாளை இது குறித்து இரண்டு தரப்பும் விசாரணை நடைபெறும். தவறு செய்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படிக்க | ஆளுநரே திமுகவை தட்டிக்கேளுங்கள் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
தவறு செய்தவர்கள் யாரையும் விடப் போவதில்லை. கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக லட்சுமண ரேகை தாண்டக்கூடிய அனைவரும் மீதும் தலைவர் என்கிற ரீதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.டிடிவி தினகரன் பாஜகவோட கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து வரும் நாட்களில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதற்கான சில நடைமுறைகளும் செயல் திட்டங்களும் இருக்கின்றன. அதற்கான காலமும் இருப்பதால் தற்போது அது குறித்து தெரிவிக்க முடியாது. பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள் சரியாக செயல்படாதவர்கள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு புதியதாக பயணம் செய்ய விரும்புவர்கள் பேருந்தில் அழைத்துச் செல்லப்படுவர்
தேசிய ஜனநாயக கூட்டணி பொருத்தவரை அதிமுக அதில் பெரிய கட்சியாக தமிழகத்தில் திகழ்கிறது. மேலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஒரு சிஸ்டம், செயல்முறை வியூகங்கள் வகுக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. தற்போது கூட்டணிக்கான பேச்சுவார்த்தை பேசுவதற்கு போதிய கால அவகாசம் இருக்கிறது. தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான மேற்கொள்ள வேண்டும் என எனக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை தகவல்
கட்சியின் வளர்ச்சிக்கு தடைகளாக இருக்கக்கூடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கட்சியில் எத்தனை ஆண்டு காலம் இருந்தார்கள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ள முடியாது. தேவைப்படின் பாஜக என்ற பேருந்தில் மாநில தலைவராக இருக்கக்கூடிய நான் கூட மாற்றப்படலாம் அது கட்சியின் வளர்ச்சிக்காக செயல்பாடாக தான் இருக்கும்" என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ