Annamalai Speech In Chennai BJP Meeting: பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்தார். இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சென்றார். அங்கு அணுஉலை மேம்பாடு திட்டம் ஒன்றை தொடங்கிய பிரதமர் மோடி, அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமானம் நிலையம் வந்து அங்கிருந்து கார் மூலம் நந்தனத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு வந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'நாம் தான் மோடியின் குடும்பம்'


தொடர்ந்து, பிரமதர் மோடிக்கு பாஜக தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றினார். முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மேடையில் உரையாற்றினார். அதில், "பிரதமர் மோடி சென்னைக்கு பலமுறை வந்திருந்தாலும், இம்முறை தன்னுடைய குடும்பத்தை பார்க்க வந்திருக்கிறார். மோடிக்கு குடும்பம் இல்லை என்று பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் சொல்கிறார். மோடி தனிமனிதன் என்கிறார். 


142 கோடி மக்கள் நாம் தான் மோடியின் குடும்பம். கோபாலபுரம் குடும்பம் மட்டும் தான் இவர்களின் கண்களுக்கு தெரியும். பிஹாரில் தொடர்ச்சியாக ஒரே குடும்பம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியது லாலு பிரசாத் யாதவ் குடும்பம்.


மேலும் படிக்க | நான் வந்தாலே சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது... திமுகவை அட்டாக் செய்த பிரதமர்!


பிரதமருக்கு அளிக்கப்பட்ட பரிசுகள் 


17 வயதில் வீட்டை பிரிந்து, இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து இன்றைக்கு கிட்டதட்ட ஒரு யோகியாக தன் வாழ்க்கை முழுவதும் மக்களுடைய முன்னேற்றுத்துக்காக அர்ப்பணித்த மோடிக்கு 142 கோடி மக்களும் தான் குடும்பம். கோபாலபுர குடும்பத்தையும் நான்காவது தலைமுறைகளாக அரசியலில் இருக்கும் திமுகவின் சிற்றரசர்களையும் அரசியலில் இருந்து அகற்ற வேண்டியது நேரமிது. இந்தத் தேர்தல் நமக்கு அருமையான வாய்ப்பு.


இன்றைக்கு காஞ்சிபுரத்தில் நெய்த பட்டு சால்வை அணியப்பட்டது. இந்த சால்வையில் சிறுத்தை அச்சிடப்பட்டுள்ளது. இன்றைக்கு மக்களுக்கு மட்டுமல்ல, வாய் பேச முடியாத ஜீவன்களுக்காகவும் பிரதமர் மோடி பாடுபட்டு கொண்டிருக்கிறார். 2014ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது 7 ஆயிரத்து 910 சிறுத்தைகள் இருந்தன. அதுவே இன்று 75 சதவீதம் உயர்ந்து 13 ஆயிரத்து 874 சிறுத்தைகள் உள்ளன. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே சால்வையில் சிறுத்தையின் படம் அச்சிடப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம் திட்டம் கொண்டுவந்ததற்காக பனை மர பொருட்கள் பரிசளிக்கப்பட்டுள்ளது.


பேய் அரசாண்டால்...


இந்திய அரசியலை அடிப்படையில் இருந்து மாற்றியவர் பிரதமர் மோடி. ஒரு நேர்மையான அரசியலை இந்திய ஜனநாயகத்தில் கொடுக்க முடியும் என்று காட்டியுள்ளார். அவரின் வெற்றியில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மக்களவைத் தேர்தலில் உறுதியாக 400 தொகுதிக்கும் மேல் வெல்வார். 400+ தொகுதிகளை வெற்றிபெறும் போது தமிழகத்தில் இருந்து 39 எம்பிக்களை அனுப்பிவைக்க வேண்டும். இதற்கு சபதம் ஏற்போம்.


தமிழகத்தில் இன்றைக்கு நடக்கக் கூடிய திமுக ஆட்சியை, 'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்று பாஞ்சாலி சபதத்திலேயே மகாகவி பாரதி சொல்லியிருக்கிறார். ஒரு பேய் ஆட்சி செய்தால் அந்த நாடு எப்படியிருக்கும் என்பதற்கு இன்றைய திமுகவின் ஆட்சியே சாட்சி. கொள்ளை, மணல் கடத்தல், சாராயம் விற்பனை, கஞ்சா விற்பவர்களுக்கு தான் தமிழகத்தில் தற்போது முதல் மரியாதை கிடைக்கிறது. சாதாரண மக்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. இந்த ஆட்சியை அகற்ற வேண்டிய நேரமும் காலமும் வந்துவிட்டது.


அடுத்த 60 நாட்கள் இந்திய அரசியலில் முக்கியமான நாட்கள். நேற்றைய மந்திரி சபை கூட்டத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை கையில் வைத்துள்ளார் பிரதமர். அதற்கான அடித்தளத்தை 2024 தேர்தலில் அமைக்க தயாராக இருக்கிறார்" என்றா, அண்ணாமலை.


மேலும் படிக்க | ஆபத்தான ஈனுலை திட்டம்...? திறந்துவைக்கும் பிரதமர் - முதல்வர் புறக்கணிப்பு ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ