இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.



இளையராஜாவின் இந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். மேலும், சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை பாஜக ஆட்சி விதைத்துக்கொண்டிருக்கும் சூழலில் இளையராஜா இப்படி பேசியிருப்பது முற்றிலும் தவறு என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | பாஜக பிரமுகர் காருக்கு தீ வைக்கப்பட்டதா? போலீஸ் அதிரடி


இந்நிலையில் இளையராஜாவின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் தங்களது வரவேற்பை கொடுத்துவருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ராஜா என்றும் இளையராஜா என பதிவிட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 



அந்த வீடியோவில் இளையராஜா எழுதிய முன்னுரையை குறிப்பிட்டு, அம்பேத்கர், மோடி, இளையராஜா ஆகிய மூன்று பேர் அடித்தட்டிலிருந்து வந்து உச்சம் தொட்டவர்கள். உண்மையை பேச தயங்கும் தமிழகத்தில் மனதில் உள்ளதை பேசிய இசைஞானி ராஜா என்றும் இளையராஜா என கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தமிழ்நாடு பாஜகவும் ரீ ட்வீட் செய்துள்ளது.


 



அதேசமயம் இளையராஜாவுக்கு பாஜகவினர் இந்த விவகாரத்தில் ஆதரவு கொடுப்பதில் நிச்சயம் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. இதுவரை இளையராஜாவை பெரிதாக கண்டுகொள்ளாத பாஜகவுக்கும், அண்ணாமலைக்கும் தற்போது மட்டும் எப்படி அவர் மேல் இவ்வளவு பாசம் வந்திருக்கிறது என இணையவாசிகள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


மேலும் படிக்க | இளையராஜா சர்ச்சைப் பேச்சுகளும், சில ரிப்ளைகளும்.!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!