தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " திருச்சியில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையம் பணிகள் முழுமையாக முடிவடைந்து நம் நாட்டு மக்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறபடுகிறது. இதில்  பாரத பிரதமர் மோடி பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'தயாநிதி மாறன் பேச்சு... கொதிக்கும் INDI கூட்டணி...' காரணத்தை சொல்லும் அண்ணாமலை!


தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு ஏழரை லட்சம் கோடி கடன் அதிகப்படுத்தியது தான் திராவிட மாடல் அரசா?. பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழ்நாடு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது தான் திராவிட மாடல் அரசா மக்கள் கேள்வி கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உறுதியாக நிவாரண பணம் வழங்கும். 


தற்போது ஏற்பட்ட புயலால் நான்கு மாவட்டங்களில் உற்பத்தி திறன் குறைந்து உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு உற்பத்தி திறனில் பின்தங்கி கொண்டே வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 120 அடி அகலம் இருந்த பக்கீங் கால்வாய், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டு அதை 20 அடியாக குறுக்கி விட்டார்கள். இதனால் கடலுக்கு செல்லக்கூடிய வெள்ள நீர் செல்ல முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் மாநில அரசுதான். தமிழ்நாட்டில் புயல் வெள்ளம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று தெரிந்த உடனே அந்த முன் அறிவிப்பை மாநில அரசு மத்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை. அதேபோல் தொடர் கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட்ட போதும் மாநில அரசு மத்திய அரசுக்கு தகவல் கொடுக்கவில்லை. 


பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது வணக்கம் மோடி என்ற #track ட்ரெண்டிங் ஆகும். அதே சமயம் DMK IT Wing சார்பாக #gobackmodi என்று பிரபலம் செய்வார்கள் இதுதான் அவர்களுடைய வேலை. DMK IT Wing தலைவர் டிஆர்பி ராஜாவிடம் சவால் விடுகிறேன், தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அவருக்கு எதிராக #gobackstalin என்று எங்களால் பிரபலப்படுத்த முடியும். இந்த சவாலுக்கு டிஆர்பி ராஜா ரெடியா? என்று கேட்டு சொல்லுங்கள். X தளத்தைப் பற்றி எங்களுக்கு யாரும் எடுத்துரைக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதிலேயே நாங்கள் கம்பு சுத்துற வேலையெல்லாம் பார்ப்போம். தமிழ்நாட்டின் மைய பகுதியாக இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றுவது என்பது குறித்து அதற்கான நேரம் வரும்போது பேசலாம்" என்றார்.


மேலும் படிக்க |  புதிய வகை கொரோனா: தடுப்பூசி அவசியமில்லை, ஆனால் கவனம் தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ