இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘நீட்’ தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண் வழங்கவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை அடுத்து இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வினை அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளாது.


இதனையடுத்து அகில இந்திய அளவில் MBBS, BDS படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 


இந்த தீர்ப்பில், 2 வாரத்தில் மருத்துவ படிப்புக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மறு தர வரிசைப் பட்டியல் அடிப்படையில் மறு கலந்தாய்வு நடத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இவ்விவகாரத்தில் மறு உத்தரவு வரும் வரையில் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://mcc.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பார்த்துக்கொள்ளலாம்.