புது டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன. இரண்டு வகையான விருதுகள் கொடுக்கப்படுகிறது. இளம் எழுத்தாளர்களுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருதும், சிறுவர் இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதும் வழங்கப்படுகிறது. விருது பெறுவோர்க்கு செப்புப் பட்டயமும், அதனுடன் ரூ. 50,000 பணமுடிப்பும் வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டிற்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் ‘யுவ புரஸ்கார்’ விருது 23 எழுத்தாளர்களுக்கும், ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது 21 எழுத்தாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.


தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சபரிநாதனுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தமிழில் "வால்" என்ற கவிதை தொகுப்புக்காக வழங்கப்பட்டு உள்ளது. 


 



அதேபோல மற்றொரு விருதான ‘யுவ புரஸ்கார்’  குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ஆவார்.