சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை!
சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஐடி வளாகத்தில் அவ்வப்போது மர்மமான தற்கொலைகள் நடைபெற்று வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார். அவர் சென்னை ஐஐடி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க | ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
இவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாததால் மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீவன் சன்னி, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டூரபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் சென்னை ஐஐடியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் எம்.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஸ்டீவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அடுத்த மாதமே மீண்டும் ஒரு மாணவர் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை ஐஐடியில் மன உளைச்சலில் இருக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | 'எடப்பாடியே வெளியேறு' ஓபிஎஸ் தரப்பினர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ