ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை செயற்பொறியாளரின் வாகனத்தில் கட்டு கட்டாக பணம் கொண்டு செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரியின்  வாகனம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் உள்ள  விருந்தினர் இல்லத்திற்குள்  சென்றது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஸ்டெர்லைட்: தூத்துக்குடிக்கு போய் பேசு முடியுமா? ஆர்என் ரவி பேச்சுக்கு கனிமொழி - உதயநிதியின் ரியாக்ஷன்


அதனை பின்தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மறைந்திருந்து காரில் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரி கண்ணன் மற்றும் கட்டிட வரைவு நிபுணர் குமரேசன், கார் ஓட்டுநர் முனியசாமி ஆகியோர் கட்டு கட்டான பணத்தை எடுத்துக்கொண்டு  ஓட்டுநர்கள் தங்கும் அறைக்கு சென்றனர். அப்பொழுது திடீரென சென்று அவர்களை மடக்கிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவர்கள் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி நடத்தினர்.


முதற்கட்ட விசாரணையில் அவர்களிடம் இருந்து ரூபாய் 32 லட்சம் பணம் இருந்ததையும் பறிமுதல் செய்து 3 செல்போன்களையும் கைப்பற்றினர். இவர்கள் பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சமாக இந்த பணத்தை பெற்று இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். பொதுப்பணித் துறையை சேர்ந்த உயர் அதிகாரியிடம் இருந்து கணக்கில் வராத  32 லட்சம் பணத்தை கட்டுக்கட்டாக  பறிமுதல் செய்த சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | ஐபில் 2023 இறுதிப்போட்டி டிக்கெட் இலவசம்: ரெடியா நெல்லை ரசிகர்களே...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ