ஐபில் 2023 இறுதிப்போட்டி டிக்கெட் இலவசம்: ரெடியா நெல்லை ரசிகர்களே...!

நெல்லையில் அமைக்கப்பட இருக்கும் ஐபிஎல் ஃபேன் பார்க்கில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ரசிகர்களுக்கு ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2023, 07:39 AM IST
  • நெல்லை ஐபிஎல் ஃபேன் பார்க்
  • நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • சிறந்த ரசிகருக்கு இலவச ஐபிஎல் டிக்கெட்
ஐபில் 2023 இறுதிப்போட்டி டிக்கெட் இலவசம்: ரெடியா நெல்லை ரசிகர்களே...!  title=

2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 29 ம் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இந்த போட்டிகளை காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்த வகையில் ஐபிஎல் நிர்வாகம் சார்பில் ஃபேன் பார்க் ஒன்றை அமைத்து மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை காணும் நிலையை ஒவ்வொரு ரசிகரும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில்  8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பிரம்மாண்ட திரைகள் மூலம் அன்றைய தினம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஐபிஎல் மற்றும் நெல்லை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 

மேலும் படிக்க | ஆளுநருக்கு ஸ்டாலின் கண்டனம்... 'சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே சரி' - இப்போது என்ன பிரச்னை?

 இந்த ஃபேன் பார்க்கில் கிரிக்கெட் மைதானத்தில் ஒவ்வொரு ரசிகரும் எந்த வகையிலான கொண்டாட்டத்தில் ஈடுபடுவாரோ அத்தனை ஏற்பாடுகளையும் ஐபிஎல் நிர்வாகமும் பிசிசிஐயும் செய்துள்ளது. இலவசமாக நடைபெறும் ஃபேன் பார்க் நிகழ்வில் வித்தியாசமான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலான குதூகலமான பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பத்தாயிரம் பேர் வரை கலந்து கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் எதிர்பார்த்திருக்கிறது. இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் புதிய திட்டத்தையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

 அதில் கிரிக்கெட்டின் வெறித்தனமான ரசிகர் என நிரூபிக்கும் ஒருவருக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இறுதி போட்டிக்கான டிக்கெட்டை இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நெல்லையில் நடைபெற்றது. இதில் பிசிசிஐ-ன் தேர்வு பிரிவு மேலாளர் சுமீத் மாலப்புரக்கர் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் சரவணன் முத்து ஆகியோர் கலந்துகொண்டு ஐபிஎல் ஃபேன் பார்க் நிகழ்வில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு குறித்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பாஜக தலைமையில் தான் கூட்டணி... அதிமுகவுக்கு செக் வைக்கும் அண்ணாமலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News