கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு தனது நெடுநாள் சேமிப்பினை வழங்கிய தமிழக சிறுமிக்கு Hero சைக்கில் நிறுவனம் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் பொய்த மழையின் காரணமாக வரலாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதித்துள்ள கேரள மாநிலத்தில், இதுவரை 370 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 8.5 லட்சம் பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 


கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு உதவும் வகையில் நாடுமுழுவதிலும் இருந்து நிராணப் பொருட்கள், நிதி வழங்கப்பட்டு வருகின்றது. 


அந்தவகையில் விழுப்புரத்தை சேர்ந்த சிவசண்முகம்-லலிதா தம்பதியின் 8-வயது மகள் அனுப்பிரியா, தான் சைக்கில் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.8000 பணத்தை நிவாரண நிதியாக வழங்கி உள்ளார். 


இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில் சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வந்தது. இந்நிலையில் இச்சிறுமிக்கு பாராட்டுகளை மட்டும் அளிக்காமல், அவர் விரும்பியவாறு சைக்கில் வழங்கி பெருமை படுத்தியுள்ளது HERO சைக்கில் நிறுவனம்.


இதுகுறித்து HERO சைக்கில் நிறுவன உறிமையாளர் Pankaj M Munjal தன் ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது...