தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ப்ரோட்டான் தெரபி சென்டர் இன்று திறந்துவைக்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை தரமணியில் அப்பலோ மருத்துவமனை சார்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் இந்த "Proton Cancer Centre"-யை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் இன்று திறந்து வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.



இந்நிகழ்ச்சில் பேசிய முதல்வர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து பேசிய அவர்., 


கடந்த 8 ஆண்டுகளில் ரூ.221.30 கோடியில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், 51 புதிய தாலுகா மருத்துவமனைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.190.37 கோடியில் 30 படுக்கை வசதிகள், ஸ்கேன் வசதி, அறுவை சிகிச்சை வசதி போன்ற வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.


5 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியும், ஏற்கனவே செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப்படிப்பு இடங்களை அதிகரித்தும், 1000 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 606 முதுகலை மருத்துவ படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


புற்றுநோய் அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக ரூ.165 கோடி மதிப்பில் லீனியர் ஆக்ஸிலரேட்டர்கள், ரூ.79 கோடி மதிப்பில் கோபால்ட் கதிர்வீச்சு சிகிச்சை கருவிகள் போன்ற நவீன மருத்துவ கருவிகள் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டு பேசினார்.