ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஆப்பிள் 13 மினி ஸ்மார்ட்போனில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். மக்களின் வாழ்வியலைக் அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் ஆப்பிள் இசிஓ டிம் குக்கை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னுடைய டிவிட்டரில் மாணவர்கள் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்துள்ள அவர், ஐபோன் 13 மினி ஸ்மார்ட்போன் மூலம் தமிழக உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் வியக்க வைப்பதாக தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘ஆஞ்சியோவில்’ பிழை - திருத்தம் செய்து சாதனைப் படைத்த மதுரை அப்போலோ டாக்டர்கள்


அவர்கள் எடுத்த புகைப்படங்கள் சென்னை எழும்பூரில் உள்ள பழமையான அருங்காட்சியகத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும், அனைவரும் நேரில் காணுமாறும் டிம் கும் தன்னுடைய டிவிட்டரில் கூறியுள்ளார். இந்த புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்கள் பேசும்போது, தமிழகம் நீண்ட நெடிய கலாச்சாரம் மிக்க பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மண், உணவு, கட்டிடக் கலை, இயற்கை வளங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அழகை புகைப்படங்கள் வழியே அடையாளப்படுத்துவதான் மிகச்சிறந்ததாக இருக்கும். அதனடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான புகைப்பட போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 



இதில் கலந்து கொண்டு மாணவர்கள் எடுத்த அழகான புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளன எனத் தெரிவித்தார்.  குக் தனது ட்வீட்டில், மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் இப்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஏப்ரல் 17, 2022 வரை காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த புகைப்படங்களை தமிழகம் முழுவதும் இருந்து 40 மாணவர்கள் எடுத்துள்ளனர். Apple iPhone 13 Mini ஸ்மார்ட்போன் மூலம் யூசர்கள் 60 fps வேகத்தில் 4K வரை டால்பி விஷன் மூலம் HDR வீடியோவைப் படம்பிடிக்க முடியும். தமிழக மாணவர்கள் எடுத்த புகைப்படத்தை பாராட்டி ஆப்பிள் சிஇஓ டிவிட்டரில் பதிவிட்டிருப்பது, மாணவர்களும், தமிழர்களின் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | படுக்கை அறையின் சுகத்தில் இருந்து வெளியே வாங்க’ - ஃபிட்னஸுக்கு அழைக்கும் டிஜிபி சைலேந்திரபாபு.!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR