‘படுக்கை அறையின் சுகத்தில் இருந்து வெளியே வாங்க’ - ஃபிட்னஸுக்கு அழைக்கும் டிஜிபி சைலேந்திரபாபு.!

உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 26, 2022, 07:59 PM IST
  • ‘படுக்கை அறையின் சுகத்தை விட்டுவெளியே வாருங்கள்’
  • காலை நடைபயிற்சியில் வீடியோ போட்டு அசத்தும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு
  • மாமல்லபுரம், செங்கல்பட்டு ஆய்வாளர்களிடமும் மாலையில் ஆலோசனை
‘படுக்கை அறையின் சுகத்தில் இருந்து வெளியே வாங்க’ - ஃபிட்னஸுக்கு அழைக்கும் டிஜிபி சைலேந்திரபாபு.! title=

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு சமீப காலமாக உடல்நலம் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். காலை நேரத்தில் விடாமல் நடைபயிற்சி மேற்கொண்டு வருபவர், அதில் பலருக்கு இன்ஸ்பிரேஷனாகவும் விளங்கி வருகிறார். அவ்வப்போது, காலை நடைபயிற்சியை வீடியோவாக பதிவேற்றி, அதில் சில சுவாரஸ்ய உடல்நலக்குறிப்புகளை எடுத்துரைப்பார். அது ஏன் ? கொரோனா காலத்திலும்கூட நடைபயிற்சியை அவர் விட்டதில்லை. அப்போதும் ஒரு சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்டார். அதில், அவரது வீட்டு மாடியில் நடைபயிற்சி மேற்கொண்டபடி அவர் பேசும் வீடியோ அந்த சமயத்தில் வைரலானது. அதாவது, ‘மொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில் . இளம் வெயிலில் ஓடினால் விட்டமின்-D கிடைக்கும், அது நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடம் ஓடுஙகள், அடுத்து 30 நிமிடம் ஓடுங்கள், அடுத்த ஒரு மணி நேரம் கூட ஓடலாம். நாளை முதல் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள மொட்டை மாடியில் முயற்சி செய்து பாருங்கள்’ என்று கூறியுள்ளார். கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சாலைகளில் நடைபயிற்சி மேற்கொண்டு அவ்வப்போது வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். காலை நேரத்தில் மிகுந்த உற்சாகத்துடன் அவர் போடும் இந்த ரக வீடியோவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அவரைப் பின்தொடர்ந்து பல இளைஞர்கள் உடல்நலம் மற்றும் உடலைப் பேணுதலை முறையாக செய்துவருகின்றனர். 

மேலும் படிக்க | விருதுநகர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 பேர் வேறு சிறைக்கு மாற்றம்

இந்நிலையில் புதிதாக ஒரு வீடியோவை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். அதில், ‘அனைவருக்கும் குட்மார்னிங். பரிசுகள் பத்தி நமக்கு எல்லாருக்கும் தெரியும். ஆனா, நமக்குநாமே பரிசு கொடுத்துக்கிறத பத்தி யாருக்காவது தெரியுமா. ஆமாங்க. ஒரு மணி நேரம் 36 நிமிடம் சைக்கிளில் பயணம் செய்த உடலுக்கு பரிசாக இளநீரை தருகிறோம். அதுதான் உடலுக்கு நாங்கள் தரும் பரிசு. சைக்காலஜிக்கா இதன் பெயர் Reenforcement. அதாவது, நம்ம எதுக்கு பரிசு கொடுக்குறோமோ அந்த செயல் மீண்டும் மீண்டும் செய்யணும் நமக்கு. அதுக்குத்தான் இது. நீங்கள் எழுந்திருப்பதற்கு முன்பாக நாங்கள் 50கி.மீ தூரம் பயணித்து முடித்துவந்துவிட்டோம். வீட்டில் இருக்க கூடிய படுக்கை அறையின் பாதுகாப்பான சுகத்தில் இருந்து வெளியே வாங்க. அப்போதான் நாம சாதிக்க முடியும். ஆகவே, உங்களுக்கு நீங்களே பரிசு கொடுக்க பழகிக்கோங்க. இதுபோல, நீங்களும் உடலை பேணுங்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பாவம் போலீஸ்.. அவங்க பிரச்சனையை யார்தான் பேசுறது??

காலை நேரத்தில் இந்த வீடியோ பதிவை வெளியிட்ட பின்னர், பணிநிமித்தமாவும் சைலேந்திரபாபு சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறார். மாமல்லபுரம் காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அங்கு காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், காவல் நிலையத்தில் உள்ள வழக்குகள் குறித்தும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் அவர் உரையாடினார். பின்னர் காவலர்களிடம் மாமல்லபுரம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்கிருந்து, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், கல்பாக்கம் உள்ளிட்ட ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டார். பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்களிடம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார். உடல்நலத்தைப் பேணுவதிலும் சரி, காவல்துறை பணியிலும் சரி...தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எப்போதும் இளைஞர்களுக்கு ‘இன்ஸ்பிரேஷன்’ தான்.!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News