ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக வாக்குவாதம் - வைரலாகும் வீடியோ
shawarma : கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர், கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் அன்னூர் சத்தியமங்கலம் சாலையில் ஜெராக்ஸ் கடையை நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ். சம்பவத்தன்று மாலை அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே செயல்பட்டு வரும் கோகுல் என்பவருக்கு சொந்தமான பார்பிக்யூ ஷவர்மா கடையில் ஆன்லைன் மூலம் சவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
அதனை ஆண்ட்ரூஸ் சாப்பிட்ட போது ஒவ்வாமையால் வாந்தி வந்ததுடன், சவர்மாவில் இருந்து கெட்டுப்போன வாடை வீசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நண்பர்களை அழைத்துக் கொண்டு கடைக்கு நேரில் சென்ற ஆண்ரூஸ் அங்கு கடை ஊழியர் மற்றும் உரிமையாளர் கோகுலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க | ஆம்னி பேருந்தில் தொடரும் அவலம் - இளம்பெண்ணிடம் அத்துமீறல்
இதனிடையே தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருதரப்பையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஆண்ட்ரூஸ் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | காதல் மனைவியை ஆந்திரா கூட்டிச்சென்று கணவன் செய்த காரியம்... திடுக்கிடும் வாக்குமூலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ