அரியலூரில் கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு
Sexual Harassment Verdict: மாணவியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்த அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி
அரியலூர்: அரியலூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜெயராமனின் மகள் வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளி ஜெயராமனுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரின் மூன்றாவது மகள் அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார்.
இந்நிலையில் உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்(22) என்பவர் கடந்த 18/7/2022 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் படிக்க: இந்தியாவால் துன்புறுத்தப்பட்ட நித்யானந்தா? ஐநா-வில் கைலாசா சொன்னது என்ன?
இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்று இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் குற்றவாளி லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும்,பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடாக ரூபாய் 7 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: மனீஷ் சிசோடியா ஒரு ரூபாய் ஊழல் செய்ததாக கூட பாஜகவால் நிரூபிக்கமுடியாது: AAP சவால்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ