மதுரை மாநகர் நேதாஜி சாலை பகுதியில் நேற்று (பிப். 27) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"பிரதமர் மோடியின் திட்டத்தில் பயன்பெற்ற ஒரு கோடி பயனாளிகளுடன் செல்பி என்ற நிகழ்ச்சியை மதுரையில் தொடங்கிவைத்துள்ளேன்.
மத்திய அரசின் அதிகளவிற்கு பெண் பயனாளிகள்தான் உள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர்களிலும் பெண் பயனாளிகள்தான் அதிகம். பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் அடிப்படையில் பெண்களை மையப்படுத்தி ஆட்சியை நடத்திவருகிறார், பிரதமர் மோடி. பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம். மோடி ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு என்பது திமுக மக்களுக்கு திட்டங்கள் செய்துள்ளதால் ஓட்டு போடுவார்கள் என்றால் எதற்கான வாக்காளர்களுக்கு பரிசுபொருட்களை வழங்கி மக்களை அடைத்துவைக்கின்றனர். மக்களை சுற்றுலா அழைத்துசெல்வது போன்ற புதிய யுக்தியை கையாண்டுவருகின்றனர்.
Sharing some ‘Selfies with Mahila Labharthi’ who have benefited from various Modi government schemes.
You too join this initiative and Let's reach the one crore mark by uploading our selfies on the NaMo App! #MahilaMorcha1CrSelfies pic.twitter.com/6RVxQyWr1P
— Vanathi Srinivasan (@VanathiBJP) February 27, 2023
திமுக அரசின் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. அதனை சரிகட்டப் பார்க்கிறது. ஆனால் அது நடக்காது. தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிபெறும். பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்களில் தமிழ்நாடு அரசு தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் சிறுமி கூட்டு பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். மருத்துவகல்வியில் மாற்றம் குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து, தீர்ப்பாக மாறாது. உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள். நீட் தேர்வு தீர்ப்பு வரும்போது பார்த்துகொள்ளலாம்" என்றார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போது வரை ரூ. 12.35 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்தும், அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. முதலில், அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் சமாளித்தார். பின்னர்,"மற்ற திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இது பெரிய அளவிலான திட்டம். அதனால், ஜப்பான் நிதி நிறுவனம் விரைவில் நிதி வழங்கியதும் வேலைகள் தொடங்கும்" என்றார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ