இராணுவத்தில் பயன்படும் ஒவ்வொரு பொருளுக்கும் நம் நாட்டை பாதுகாக்கும் மாபெரும் கடமை உண்டு. அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், அதை உற்பத்தி செய்யும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாகவும் பாதுகாப்புத்துறை சார்ந்த கண்காட்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. பாதுகாப்பு கருவிகளின் ஒவ்வொரு உதிரி பாகமும் அனைத்து சூழலிலும் அனைத்துவித காலநிலைக்கு ஏற்ப உறுதி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் அதனை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்தால் இராணுவ படைக்கு இன்னும் பலத்தை அதிகாரிக்கும் என்றே கூறலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் சில ராணுவத்திற்கு பயன்படும் பாதுகாப்பு கருவிகளின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. காலப்போக்கில் அதன் உறபத்தி திறன் குறைந்து கொண்டே வருவதாகவும், அதிலும் சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை நிறுத்திக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தன. இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் சரிவை சந்தித்திருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பாக இந்த கண்காட்சி அமைந்தது. 


பாதுகாப்புத்துறைக்குத் தேவையான தளவாடங்கள், அவற்றை தயாரிக்க தேவைப்படும் உபகரணங்கள், ராணுவ வீரர்கள் அணியும் பாதுகாப்பு உடைகள், ட்ரோன் கேமிராக்கள், அதிநவீன வசதிகள் கொண்ட பாதுகாப்பு உபகரணங்கள்  என ஆயிரக்கணக்கான பொருட்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. மேலும், இதுதவிர விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை தயாரிக்கக்கூடிய நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களும் காட்சி படுத்தப்பட்டிருந்தன.


3 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் திருச்சியை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனத்தின் துப்பாக்கிகளை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில், சிறிய ரக துப்பாக்கி முதல் அதிநவீன ரகத்தைச் சேர்ந்த ஏ.கே.47 வகை துப்பாக்கிகளும் பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு சுமார் 15ஆயிரம் ரைகா ரக துப்பாக்கிகள் ராணுவத்திற்கு செல்வதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 


மேலும் படிக்க | தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய பெண் - காதலனுடன் சிக்கியது எப்படி?


இந்நிலையில், பாதுகாப்புத்துறைக்குத் தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்து அனுப்புவதற்கு சிறு,குறு தொழில்முனைவோருக்கு இந்த கண்காட்சி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதோடு பாதுகாப்புத்துறையின் சிறப்பம்சங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கும் இந்த கண்காட்சி உதவியாக அமைந்தது. 


மேலும் படிக்க | மரம் அறுக்கும் இயந்திரத்தால் மனைவி மற்றும் பிள்ளைகளை அறுத்து கொன்ற ஐடி ஊழியர்!


 சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR