இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் இன்று கைது செய்யப்பட்டார். இவர் டெல்லி திகார் ஜெயிலில் வைகப்பட்டுள்ளர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுகேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க-வின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைதானார். பின்னர், அவர் ஜாமீனில் விடுதலையானார். பின்னர், கார் தரகரான சுகேஷ் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற சொகுசு கார்களை விற்பனை செய்துவந்தார். அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. 


இதைதொடர்ந்து நவம்பர்-8 மற்றும் 10-ம் தேதிகளில் கர்நாடகா வருமான வரித்துறை அதிகாரிகள் கொச்சியில் சோதனை நடத்தினர். வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவரின் இடத்தில் நவாஸ் சொகுசு கார்களை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வருமான வரித்துறையினர் 8-சொகுசு கார்கள் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்யை கைப்பற்றினர்.


இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தைப்  பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் சுகேஷின் கூட்டாளி புல்கித் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர்.