சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதியன்று காலமானார். இந்நிலையில் ஜெயலலிதா அவர்கள் காலமானதும் ஓ.பன்னீர்செல்வம் சென்னையின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். 


இந்நிலையில், அதிமுக-வின் பொதுச்செயலாளர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் யார் என்ற விவகாரத்தில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்ப வேண்டாம்' என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார். 


அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்னையன் கூறியதாவது: 


அதிமுக பொதுச்செயலர் யார் என்பது குறித்து வதந்தி பரவுகிறது. அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். ஜெயலலிதாவின் அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்றுவோம். அதிமுகவின் புதிய பொதுச்செயலர் விரைவில் ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக அதிமுகவில் போட்டி எதுவும் இல்லை. அப்படியான செய்திகள் அனைத்துமே வதந்தி.. இவ்வாறு பொன்னையன் கூறினார்.