மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டி உள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 114 அடியைக் கடந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகத்தின் கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை என, இந்த இரண்டு அணைகளில் இருந்து விநாடிக்கு 62 ஆயிரத்து 399 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.82 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்ன் அளவு விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 85.15 டிஎம்சியாக உள்ளது.


ஓரிரு நாளில் அணை முழுக்கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், அணையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரப் பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.