சட்டசபை தேர்தலில் 2016


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. வாக்கு பதிவு 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே மக்கள் நீண்ட வரிசைகளில் வாக்குச் சாவடிக்கு வெளியே நின்டிருந்தனர்.


தமிழ்நாட்டில் மொத்தம் 233 தொகுதிகள், அதில் 232 தொகுதிகளில் நடைபெறுகிறது மற்றும் ஒரு தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட 3700க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் 18% வாக்குகள் பதிவாகியுள்ளன.


அதேபோல கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகள்  முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி என இரண்டு கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாபெரும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இத்தேர்தலில் முக்கிய பங்கு வகுக்கிறது.


9.4 லட்சம் வாக்காளர்கள் கொண்ட புதுச்சேரியிலும் இன்று 30 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.