சட்டப்பேரவையில் விதி 92(7) இன் கீழ் ஆளுநர் குறித்து பேச அனுமதி இல்லை என சபாநாயகர் எச்சரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டசபை 10 நாள் விடுமுறைக்குப்பின் இன்று மீண்டும் தொடங்கியது. இதில், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கலந்து கொண்டது!


தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த மே 29-ம் தேதியன்று தொடங்கியது. அதில், பள்ளிக் கல்வித்துறை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், உயர் கல்வித்துறை, பொதுப் பணித்துறை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் மீதான, மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கடந்து 14-ம் தேதியில் சுகாதாரத் துறை மீதான கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது, எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்து, அறிக்கைகளை வெளியிட்டார். 


அதன்பிறகு, பத்து நாள் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, சட்டசபை இன்று மீண்டும் தொடங்கியது. அதில், முன்னாள் எம்.எல்.ஏ வேதாசலம் மறைவுக்கு பேரவையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


இதையடுத்து, திமுக எம்எல்ஏ ராமசந்திரன் பேசுகையில், எம்எல்ஏ-க்களுக்கான புத்தகங்கள் கனமாக இருப்பதால் கொண்டுசெல்ல முடியவில்லை. புத்தகம் கனமாக உள்ளதால் காகிதத்திற்கு மாற்றுப் பொருள் வேண்டும் எனவும் தெரிவித்தார்.


இதற்க்கு பதிலளித்த சபாநாயகர் கூறுகையில், எம்எல்ஏக்களுக்கு தரப்படும் புத்தகங்கள் கனமாக இருப்பதால் மாற்று ஏற்பாடு விரைவுயல் செய்து தரப்படும் என்று அவர் கூறினார்.


இதையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், செங்கல்பட்டில் ரூ.60 கோடியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று பேரவையில் விதி எண் 110 இன் கீழ் சுகாதாரத்துறையில் அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், ரூ.82 கோடியில் 985 சுகாதார மையங்கள் ஒருங்கிணைந்த சுகாதார மையங்களாக தரம் உயர்த்தப்படும். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ.55.5கோடியில் கூடுதலாக 3 தளங்கள் கட்டப்படும் என்றும் ரூ.42 கோடி மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 தளங்கள் கூடுதலாக கட்டப்படும் எனவும் தெரிவித்தார். 


இதை தொடர்ந்து பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், கடந்த காலங்களில் திமுக - அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை. மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் வகையில் ஆளுநரின் ஆய்வு 
உள்ளது; மரபை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆய்வு குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 


இதற்க்கு பதிலளித்த சபாநாயகர் கூறுகையில், சட்டப்பேரவையில் விதி 92(7) இன் கீழ் ஆளுநர் குறித்து பேச அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார்.