சட்டமன்ற தேர்தல் மு. கருணாநிதி வெற்றி!!
திருவாரூர் தொகுதியில் போட்டிட்ட திமுக முதலைமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 68,366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,21,473 ஆகும்.
இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் 53,107 வாக்குகள் பெற்றுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
திமுகவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.