வேலூர் மாவட்டம், காட்பாடியில் இன்று மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

166 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நான்கு சக்கர வாகனம், மருத்துவ காப்பீடு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட  பல்வேறு நலத்திட்டங்கள் சார்பாக ரூ.46 லட்சம் மதிப்பில்  நலத்திட்டங்களை வழங்கினார். 


நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்களுக்கு, உதவிக்கரம் நீட்டுவது சிறந்த அரசாக திகழும் என்று தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களுக்கு உதவி செய்திட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.


Read Also | சசிகலா வருகையை குறித்து அதிமுக தலைமை தான் முடிவெடுக்கும்


மாற்றுத் திறனாளிகளுக்காக தமிழக அரசு (Tamil Nadu) பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் மத்திய அரசு திட்டமாகும் அதனை நிறைவேற்றுவது அவர்கள் கையில் தான் உள்ளது. எக்காரணம் கொண்டும் கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்டுவதை தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது. நீர்நிலைகளை கணக்கெடுக்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன் என்று தெரிவித்தார்.


ஒரு வாரகாலத்தில் கணக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். குடியாத்தத்தில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு எடுக்கப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


தமிழகத்தில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் அதில் முதற்கட்டமாக நூறு தடுப்பணைகளை கட்டுவோம் அணைகள் பாதுகாப்பு சட்டம் மத்திய அரசு நேற்றுகொண்டு வந்தது என்று கூறினார்.


ALSO READ | சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா: ஓமிக்ரான் தொற்றா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR