தென் தமிழகத்திலிருந்து ராயலசீமா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இதுதொடர்பாக வானிலை மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

25.01.2022, 26.01.2022: தென்தமிழகம், வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.


27.01.2022: தென்தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.


28.01.2022, 29.01.2022: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.


சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) 4, கள்ளக்குறிச்சி, சுலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), குடிதாங்கி (கடலூர்) வானமாதேவி (கடலூர்) தலா 3, திருத்தணி (திருவள்ளூர்), தஞ்சாவூர், தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), சிதம்பரம் (கடலூர்) , அண்ணாமலை நகர் (கடலூர்), விருகாவூர் (கள்ளக்குறிச்சி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), தலா 1.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. 


மேலும் விவரங்களுக்கு: imdchennai.gov.in இணையதளத்தை காணவும். வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் முனைவர் எஸ். பாலச்சந்திரன் அனுப்பினார்.


ALSO READ | அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR