சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் -வீடியோ
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு சென்னை மகளிர் நீதிமன்ற வளாகத்தில் தர்ம அடி கொடுக்கப்பட்டது.
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில், தனது 11 வயது மகளை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் சமீபத்தில் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற போது தான் இது தனக்கு தெரிய வந்ததாகவும், மேலும், தனது மகளை அவர்கள் கொல்ல முயற்ச்சி செய்துள்ளனர் என சிறுமியின் கழுத்தில் இருந்த காயத்தை சுட்டிக்காட்டி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதுக்குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகன.
அந்த சிறுமி வசிக்கும் அபார்ட்மெண்டில் சுமார் 300 குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். சிறுமி லிப்ட்டில் செல்ல வரும் போது அவரை அழைத்து காலியான இடத்திற்கு அழைத்து சென்று லிப்ட் ஆப்பரேட்டர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரையடுத்து, அங்குள்ள ஊழியர்கள் மேலும் 5 பேர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மேலும் 11 பேர் மற்ற வகையில் உதவி செய்துள்ளனர். சிறுமிக்கு மயக்க மருந்து மற்றும் போதை மருந்து கொடுத்து கடந்த 7 மாதங்களாக இந்த கொடூரம் நடந்துள்ளது.
இதையடுத்து 18 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, கைது செய்யப்பட்ட 18 பேருக்கும் வருகிற ஜூலை 31 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. பின்னர் அவர்களை அழைத்து செல்லும் வழியில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.