மக்களே கவனம்! தமிழகத்தில் இன்று தடுப்பூசி இல்லை
தமிழ்நாடு முழுவதும் இன்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாம்களுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்.
தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று. அதன்படி சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் நேற்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறறது. தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 24.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், முக்கிய இடங்கள் என23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. சென்னையில் மட்டும் 1,600 மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
Also Read | Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி
இதற்கிடையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று மாபெரும் கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றதை அடுத்து இன்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாம்களுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது.,
இந்த தடுப்பூசி முகாம்களில் மருத்துவத் துறையைச் சேர்ந்த களப்பணியாளர்கள் இத்தடுப்பூசி முகாம்களுக்காக, முகாம் நடைபெறுவதற்கு முன்பும், தடுப்பூசி செலுத்திய பிறகும் 15 மணி நேரம் கடும் உழைப்பைக் கொடுக்கின்றனர். இத்தடுப்பூசி முகாம்களில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள் அடுத்தநாள் அதாவது இன்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் பொதுமக்களும் இன்று தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்குத் தடுப்பூசி முகாம்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதற்கிடையில் நேற்று நடைபெற்ற 3-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாமில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரத்து 814 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 9 லட்சத்து 95 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இரவு 7 மணிவரை நடந்த முகாம் மூலம் மாவட்டத்தில் 1,06,156 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநில அளவில் ஒரே நாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில், திருச்சி மாவட்டம் 2-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR