TN Corona Update ஆகஸ்ட் 18: தமிழகத்தில் இன்று 1,797 பேருக்கு புதிதாக பாதிப்பு, 31 பேர் பலி
தமிழ்நாட்டில் இன்று 1,797 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,94,233 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,797 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,94,233 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 31 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,083 ஆக உள்ளது. இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,610 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 24 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,610 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,908 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,39,540 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மொத்தமாக 1,57,339 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 1,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் மொத்தம் 4,02,66,227 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரம்:
• இன்றைய பாதிப்பு - 1,797
• இன்றைய மரணங்கள் -31
• மொத்த பாதிப்பு - 25,94,233
• இன்றைய டிஸ்சார்ஜ் - 1,908
• இன்றைய சோதனைகள் - 1,57,339
Also Read | Covid Third Wave: மூன்றாம் அலையை தவிர்க்க சுலபமான வழிகள் உங்களுக்காக…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR